/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயில் வீதியில் ஆக்கிரமிப்புகள்: ஆளுங்கட்சி தலையீடு; அகற்ற முடியாமல் அதிகாரிகள் திணறல்

ADDED : ஏப் 20, 2025 11:36 PM

ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ரத வீதியில் ஆளும் கட்சியினர் ஆசியுடன் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர்.
இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பல்வேறு மாநில பக்தர்கள் வருகின்றனர். பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் வரை போக்குவரத்து நெரிசல் உள்ளது. கோயில் நான்கு ரதவீதிகள், சன்னதி தெரு, அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் 3 ஆண்டுகளாக கோயில் ரதவீதிகள், சன்னதி தெரு, அக்னி தீர்த்த கடற்கரை சாலை இருபுறமும் 200க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமித்துள்ளன. இக்கடைகளால் பக்தர்கள் விரைந்து செல்ல முடியாததுடன் திரியும் கால்நடைகளால் காயமடைந்தும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
கோயிலில் சுவாமி, அம்மனை தரிசித்து பக்தர்கள் வெளியேறும் அம்மன் முகப்பு மண்டபம் முன் சிறிய கடைகள் ஆக்கிரமித்து உள்ளன. இக்கடைகளை அகற்றிட வருவாய்த்துறை, கோயில் அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ஆளும் கட்சி நிர்வாகிகள் தலையீடு காரணமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை.
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் மலையை சுற்றிய வீதிகளிலிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. அதன்படி அங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ராமேஸ்வரம் கோயில் பகுதி ஆக்கிரமிப்புகளையும் அகற்ற உயர்நீதிமன்றம் மதுரை கிளை தாமாக முன்வந்து உத்தரவிட வேண்டும். அப்போது தான் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என பக்தர்கள் தெரிவித்தனர்.