/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி நகராட்சி பகுதியில் வைகை ஆற்றில் கழிவு நீருக்கு முற்றுப்புள்ளி
/
பரமக்குடி நகராட்சி பகுதியில் வைகை ஆற்றில் கழிவு நீருக்கு முற்றுப்புள்ளி
பரமக்குடி நகராட்சி பகுதியில் வைகை ஆற்றில் கழிவு நீருக்கு முற்றுப்புள்ளி
பரமக்குடி நகராட்சி பகுதியில் வைகை ஆற்றில் கழிவு நீருக்கு முற்றுப்புள்ளி
ADDED : அக் 01, 2025 08:59 AM

நகராட்சி தலைவர் பெருமிதம்
ப ரமக்குடி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளதாக நகராட்சி தலைவர் சேது கருணாநிதி தெரிவித்தார். அவர் கூறியதாவது:
பரமக்குடி நகராட்சியில் பல கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடர்ந்து நடக்கிறது. கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் 13 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் வாரச்சந்தை வளாகத்தில் வணிக வளாகம் மற்றும் பிரம்மாண்டமான சந்தை கட்டப்பட்டுள்ளது.
துாய்மை இந்தியா திட்டம் 2.0 திட்டத்தில் வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் சர்வீஸ் ரோட்டில் கழிவு நீர் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது.
நகராட்சி புல் பண்ணை வளாகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் ரூ.70 லட்சத்தில் ஆடு அடிக்கும் புதிய கட்டடம் கட்டுமானப் பணிகள் நடக்கிறது.
மலையான் குடியிருப்பு பகுதியில் மழை நீர் வடிகால் பணிக்கு 45 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடக்கிறது. வைகை நகரில் ரூ.15 லட்சத்தில் வடிகால் கட்டப்படுகிறது. பாரதி நகரில் ரூ.19 லட்சத்தில் வடிகால் அமைக்கப்படுகிறது.
மேலும் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உள் கட்டமைப்பு திட்டத்தின் படி ஒரு கோடியே 81 லட்சத்தில் பேவர் கல் தளம், தார் சாலை அமைக்கப்படுகிறது. சாலைகள் புனரமைப்புக்கு 1 கோடியே 36 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். உடன் நகராட்சி துணைத் தலைவர் குணா உள்ளிட்ட கவுன்சிலர்கள் இருந்தனர்.