/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தன்னாட்சி அந்தஸ்து பெற்ற ஒரே கல்லுாரி செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி
/
தன்னாட்சி அந்தஸ்து பெற்ற ஒரே கல்லுாரி செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி
தன்னாட்சி அந்தஸ்து பெற்ற ஒரே கல்லுாரி செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி
தன்னாட்சி அந்தஸ்து பெற்ற ஒரே கல்லுாரி செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி
ADDED : அக் 01, 2025 09:00 AM
ராமநாதபுரம் மாவட்டத்தில் டாக்டர் இ.எம். அப்துல்லா செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியை 1998ல் நிறுவினார். இக்கல்லுாரியில் 9 இளங்கலை பொறியியல் படிப்புகளும், 5 முதுகலை படிப்புகளும் மற்றும் 4 ஆராய்ச்சி துறைகளும் இயங்கி வருகிறது. அனுபவம் மிக்க ஆராய்ச்சி பட்டம் பெற்ற பேராசிரியர்கள், அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வக வசதிகள் போன்ற காரணங்களை வைத்து A+ தரச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதுவரை 6000 பேருக்கும் மேற்பட்ட இளங்கலை பொறியாளர்களும், 800 - க்கும் மேற்பட்ட முதுகலை பொறியாளர்கள் மற்றும் மேலாண்மை பட்டதாரிகளும், 50 -க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்களும் பட்டம் பெற்றுள்ளனர். 172 மாணவர்கள் பல்கலை ரேங்குகளை பெற்றுள்ளனர். இதில் 6 பேர் தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்கலை மானியக் குழுவினரால் தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையுடன் இணைக்கப்பட்டுள்ள 419 பொறியியல் கல்லுாரிகளில் இதுவரை 100 மட்டுமே தன்னாட்சி அங்கீகாரம் பெற்றுள்ளது.
மேலும் மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை உட்பட 11 தென் மாவட்டங்களில் அமைந்துள்ள 110 பொறியியல் கல்லுாரிகளில் 15 கல்லூரிகள் மட்டுமே இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளன. 65 சதவீதம் ஆசிரியர்கள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் கல்லுாரியில் அனுபவம் பெற்றுள்ளனர்.
அண்ணா பல்கலையில் நான்கு துறைகள் நிரந்தர இணைப்பு பெற்றுள்ளது. 2008ம் ஆண்டு மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மாணவர்களிடையே உரையாற்றினார். குறைந்த கட்டணம், தரமான ஆசிரியைகள், ஒழுக்கத்துடன் கூடிய கல்வி, மாணவர்களின் தனித்திறன் மேம்பாடு மற்றும் சிறந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருகின்றனர். இதுவரை கல்லுாரியில் 168 மாணவர்கள் பல்கலை ரேங்குகளை பெற்றுள்ளனர். இதில் நான்கு பேர் தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளனர். மலேசியாவின் மிகச்சிறந்த பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதிகமான காப்புரிமைகளை பெற்றதற்காக அண்ணா பல்கலையில் இருந்து விருது பெற்றுள்ளது.
500க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி படைப்புகளை பல்வேறு உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி நுால்கள் வெளியிட்டுள்ளார்கள். 35க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்கள்.
40க்கு மேற்பட்ட விருதுகளை வாங்கி உள்ளார்கள். 23 க்கும் மேற்பட்ட பல்வேறு தொழில்நுட்ப அமைப்புகளில் அங்கத்தினராக உள்ளனர். 35க்கும் மேற்பட்ட அறிவு சார் காப்புரிமைகளை பெற்றுள்ளனர் என கல்லுாரித்தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தெரிவித்துள்ளார்.