ADDED : டிச 21, 2025 06:28 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மின்பகிர்மான வட்டம் சார்பில் மின் சிக்கன வார விழா மேற்பார்வை பொறியாளர் கணேசன் தலைமையில் நடந்தது. செயற்பொறியாளர்கள் பாலமுருகன், குமரவேல், பட்டுராஜா பங்கேற்று மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து விளக்கினர். வீடு கட்டும் போது சூரிய ஒளி கிடைக்கும் வகையில் கட்டினால் பகலில் மின்சாரத்தை சேமிக்கலாம்.
பல்புகளை அவ்வப்போது சுத்தம் செய்வதன் மூலம் வெளிச்சம் குறைவதை தவிர்க்கலாம். மின்விசிறிகளில் எலக்ட்ரானிக் ரெகுலேட்டர்களை பயன்படுத்த வேண்டும். வாஷிங் மெஷினில் உலர வைக்கும் கருவியை தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்த வேண்டும். குளிர்சாதனப் பெட்டியின் கதவை அடிக்கடி திறக்கக் கூடாது. மின்சார வயரிங்கை குறிப்பிட்ட கால அளவில் ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். ராமநாதபுரம் நுகர்வோர் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

