ADDED : பிப் 08, 2024 08:56 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் தேசிய பசுமைப்படை சார்பில், மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டி முகமது சதக் தஸ்தகிர் கல்வியியல் கல்லுாரியில் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட வன ரேஞ்சர் திவ்யலெட்சுமி தலைமை வகித்து போட்டிகளை துவக்கி வைத்தார்.
தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பெர்னாடிட், கல்லுாரி முதல்வர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தனர்.
கடல்வாழ் பல்லுயிர்ப் பரவலைப் பாதுகாத்தல் என்ற தலைப்பில் ஓவியம், கட்டுரைப் போட்டிகள் நடந்தது.
முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் கணேசபாண்டியன், ரவீந்திரன் ஆகியோர் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை, சான்றிதழ்களை வழங்கினர்.
முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் சேகர், பசுமை தொடர்பாளர் ஜெகதீஸ்வரன், பரமக்குடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன் பங்கேற்றனர்.
