ADDED : ஏப் 12, 2025 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: மநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் ஏப்.,14 அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு முன்னிலை வகித்தார். அனைவரும் சமத்துவநாள் உறுதிமொழி எடுத்தனர். அரசு அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்தனர். கண்காணிப்பாளர் சண்முகநாதன் உட்பட அலுவலர்கள் பங்கேற்றனர்.

