/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கூவர்கூட்டம் கண்மாயில் மடை இருந்தும் பயனில்லை: தண்ணீர் செல்வதில் சிக்கல்

ADDED : செப் 01, 2025 10:20 PM

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே கூவர்கூட்டம் கிரா மத்தில் உள்ள கண்மாயில் மடை சேதமடைந்தும் வரத்து கால்வாய் மணல் மேடாகி சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் தண்ணீரை பாசனத்திற்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முதுகுளத்துார் அருகே கூவர்கூட்டம் கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கண்மாயில் தேங்கும் தண்ணீரை விவசாயத்திற்கு பயன் படுத்தி வருகின்றனர்.
கண்மாய் கடந்த பல ஆண்டுகளாகவே துார் வாரப்படாமல் உள்ளது. தற்போது வரத்து கால்வாய் மணல் மேடாகி யும் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டி உள்ளது.
மடையில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தும் இரும்பு கம்பிகள் துார்ந்து பயனற்ற நிலையில் உள்ளது. மடை இருந்தும் எந்த பயனும் இல்லை. கண் மாயில் தேங்கும் தண்ணீரை விவசாயத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. தற்போது விவசாயிகள் விவசாய பணியை துவங்க உள்ள நிலையில் மடைகள் சேதமடைந்து இருப்பதால் தண்ணீர் கொண்டு செல்ல விவசாயிகள் சிரமப்படும் நிலை உள்ளது.
எனவே வரத்து கால்வாயை முறையாக துார் வாரியும், சேதமடைந்த மடைகளை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.