UPDATED : அக் 19, 2026 04:38 PM
ADDED : அக் 19, 2026 04:36 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட அனைத்து ஓய்வூதியர் மற்றும் மூத்த குடிமக்கள் நல சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது.
முன்னாள் துணைத் தலைவர் முத்துக்கிருஷ்ணன் வரவேற்றார். பொருளாளர் முருகேசன் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்தார். முன்னாள் தாசில்தார் வரதராஜன் காப்பீட்டு திட்டம் குறித்தும், அதில் உள்ள குறைகள் குறித்த ஆலோசனையை விளக்கினார். குடும்ப ஓய்வூதியம் குறித்த அரசாணையை திருத்தம் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். –––
