/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விவசாயிகள் எதிர்பார்ப்பு *பல ஆண்டுகளாக துார்வாரப்படாத கால்வாய்கள் *பருவ மழை காலத்தில் தண்ணீர் வீணாகும் அவலம்
/
விவசாயிகள் எதிர்பார்ப்பு *பல ஆண்டுகளாக துார்வாரப்படாத கால்வாய்கள் *பருவ மழை காலத்தில் தண்ணீர் வீணாகும் அவலம்
விவசாயிகள் எதிர்பார்ப்பு *பல ஆண்டுகளாக துார்வாரப்படாத கால்வாய்கள் *பருவ மழை காலத்தில் தண்ணீர் வீணாகும் அவலம்
விவசாயிகள் எதிர்பார்ப்பு *பல ஆண்டுகளாக துார்வாரப்படாத கால்வாய்கள் *பருவ மழை காலத்தில் தண்ணீர் வீணாகும் அவலம்
ADDED : அக் 06, 2024 03:24 AM
முதுகுளத்துார் : முதுகுளத்துார் பகுதியில் உள்ள ரெகுநாத காவிரி, கூத்தன் கால்வாய் பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் இருப்பதால் பருவமழை காலத்தில் தண்ணீரை தேக்க முடியாமல் விவசாய நிலங்கள் வீணாகி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
முதுகுளத்துார் பகுதி விவசாயிகளுக்காக காமராஜர் ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ரெகுநாத காவிரி, கூத்தன் கால்வாய்கள் புல்வாய்குளத்தில் துவங்கி எஸ்.பி.கோட்டை, ஆப்பனுார், சித்திரங்குடி, கீழக்காஞ்சிரங்குளம், முதுகுளத்துார், கருமல், காத்தாகுளம், இளஞ்செம்பூர், தேரிருவேலி, உத்தரகோசமங்கை, கடலாடி உள்ளிட்ட 71 கண்மாய்களை கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இதன் மொத்த பரப்பளவு 41 கி.மீ.,ல் கடந்த பல ஆண்டுகளாக ஆற்றுப்பகுதிக்கு தண்ணீர் வராததால் ரெகுநாத காவிரி முழுவதும் சீமைக்கருவேல் மரங்கள் வளர்ந்து புதர்மண்டி கால்வாய் இருக்கும் இடம் தெரியாமல் பாலை வனம் போல் மாறிவிட்டது.
முதுகுளத்துார், கடலாடி பகுதியில் 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நன்செய் நிலங்கள் வீணாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் வானம் பார்த்த பூமியாக விவசாயம் செய்து ஏமாற்றம் அடைந்தனர். மழைக்காலத்தில் பெய்யும் மழைநீர் கால்வாயில் தேங்காமல் வீணாகிறது.
விவசாயிகள் பயனடையும் வகையில் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரும் இப்பகுதிக்கு முழுமையாக வந்து சேர்வது கிடையாது. விவசாயிகள் கூறியதாவது:
முதுகுளத்துார் பகுதியில் முக்கிய நீராதாரமாக விளங்கும் ரெகுநாத காவிரி, கூத்தன் கால்வாய் பல ஆண்டுகளாகவே தண்ணீர் வரத்து இல்லாமல் சீமைக்கருவேல் மரங்கள் வளர்ந்துள்ளது. வரத்து கால்வாய்கள் மணல் மேடாகி இருந்த இடம் தெரியாமல் அழிந்து வருகிறது. கால்வாயில் தண்ணீர் வரத்து இல்லாமல் விவசாயம் அழிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே விவசாயிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் ரெகுநாத காவிரி, கூத்தன் கால்வாயை துார்வார மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.