/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சீசன் நேரத்தில் பருத்தி பஞ்சு விலை வீழ்ச்சி கிலோ ரூ.55க்கு விற்பனை விவசாயிகள் பாதிப்பு

ADDED : ஜூன் 04, 2025 02:32 AM

ராமநாதபுரம்:சீசனை முன்னிட்டு பருத்தி வெளியூர் வரத்து உள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்து கிலோ 55க்கு விற்கிறது. ரூ.100 வரை எதிர்பார்த்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி நடக்கிறது. சத்திரக்குடி, பரமக்குடி, உத்திரகோசமங்கை, பாண்டியூர், கமுதி, முதுகுளத்துார் ஆகிய பகுதிகளில் அதிகளவில் பருத்தி சாகுபடி செய்கின்றனர். இவ்வாண்டு மழை காரணமாக ஊருணிகளில் தண்ணீர் உள்ளதால சீசனில் பருத்தி நன்றாக விளைந்தது.
தற்போது காய்காத்து பஞ்சு எடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் வெளியூர்களில் இருந்து பருத்தி பஞ்சு வரத்து உள்ளது. இதனால் எதிர்பார்த்த விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கமுதி தரக்குடியை சேர்ந்த தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எஸ்.முத்துராமலிங்கம் கூறுகையில், ஏக்கருக்கு ரூ.40ஆயிரம் வரை செலவாகிறது. 4 ஆண்டுகளுக்கு முன்பு பருத்தி பஞ்சு கிலோ ரூ.110 வரை விலை போனது. அதன் பிறகு கிலோ ரூ.80க்குமேல் உயரவில்லை. பஞ்சு கிலோ ரூ.100க்கு விற்றதால் வருமானம் கிடைக்கும். ஆனால் தற்போது கிலோ ரூ.55 முதல் ரூ.60 வரை தான் வியாபாரிகள் கேட்கின்றனர். செலவழித்த தொகையை எடுக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளோம் என்றார்.