/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விபத்து, இயற்கை மரண நிதி கிடைக்காமல் 311 நெசவாளர்களின் குடும்பங்கள் தவிப்பு
/
விபத்து, இயற்கை மரண நிதி கிடைக்காமல் 311 நெசவாளர்களின் குடும்பங்கள் தவிப்பு
விபத்து, இயற்கை மரண நிதி கிடைக்காமல் 311 நெசவாளர்களின் குடும்பங்கள் தவிப்பு
விபத்து, இயற்கை மரண நிதி கிடைக்காமல் 311 நெசவாளர்களின் குடும்பங்கள் தவிப்பு
ADDED : டிச 14, 2024 02:53 AM
பரமக்குடி:தமிழகம் முழுவதும் பணியின் போது விபத்து, இயற்கை மரணமடைந்த 311 கைத்தறி நெசவாளர்களின் குடும்பத்தினர் அரசு நிதி கிடைக்காமல் தவிக்கின்றனர்.
பாரம்பரிய கைத்தறி நெசவுத் தொழில் செய்யும் நெசவாளர்களுக்கு அவர்கள் சார்ந்த கூட்டுறவு சங்கங்கள் மூலம் இன்சூரன்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதன்படி பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா திட்டம், பிரதம மந்திரி சுரக்க்ஷா பீமா திட்டத்தில் முறையே ரூ.2 லட்சமும், மாநில சங்க உதவித்தொகை ரூ.25 ஆயிரம், புங்கர் பீமா திட்டத்தில் ரூ.65 ஆயிரம் என இயற்கை அல்லது விபத்து மரண காப்பீடு தொகை வாரிசுதாரருக்கு வழங்கப்பட்டு வந்தது.
இதில் 2016 முதல் 2018 வரை 456 கோரிக்கை மனுக்கள் மாநிலம் முழுவதும் கைத்தறி துறைக்கு சென்றுள்ளது. ஐந்தாண்டு போராட்டத்திற்கு பின் சில மாதங்களுக்கு முன்பு 145 பேரின் வாரிசுதாரர்களுக்கு இந்நிதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 22 பேர் உட்பட 311 பேருக்கு இன்னும் நிதி வழங்கப்படவில்லை.
இதனால் ஏழை நெசவாளர் குடும்பங்களில் தொழில் செய்தவர் இறந்த நிலையில் வாரிசுதாரர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பரமக்குடியில் பாரதிய மஸ்துார் சங்க மாநில கைத்தறி பேரவை பொருளாளர் காசி விஸ்வநாதன் கூறியதாவது: இத்திட்டத்தின் கீழ் மரணமடைந்த உறுப்பினர்களுக்கான நிதி ஆறு ஆண்டுகளை கடந்தும் வாரிசுதாரர்களுக்கு அளிக்கப்படவில்லை.
முதல்வர் ஸ்டாலின் உடனடியாக கைத்தறி துறைக்கு உத்தரவிட்டு நிதி வழங்க உதவ வேண்டும்.
தொடர்ந்து திட்டம் கிடப்பில் உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இதனால் 2018 க்கு பிறகு இறந்த உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு விபத்து, இயற்கை மரண நிதி கிடைக்கவில்லை என்றார்.

