/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஐந்திணை பூங்கா பசுமையாக்கலுக்கு கைகொடுக்கும் பண்ணை குட்டைகள்
/
ஐந்திணை பூங்கா பசுமையாக்கலுக்கு கைகொடுக்கும் பண்ணை குட்டைகள்
ஐந்திணை பூங்கா பசுமையாக்கலுக்கு கைகொடுக்கும் பண்ணை குட்டைகள்
ஐந்திணை பூங்கா பசுமையாக்கலுக்கு கைகொடுக்கும் பண்ணை குட்டைகள்
ADDED : அக் 04, 2025 03:30 AM

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே ஐந்திணை பூங்கா புல்வெளிகள், மலர் வகைகளை பராமரிக்க பண்ணைக் குட்டைககளில் சேகரிக்கப்படும் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
திருப்புல்லாணி அருகே தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஐந்திணை பாலை நிலப் பூங்கா 2015ல் திறக்கப்பட்டு செயல்படுகிறது. 22 ஏக்கரில் முற்றிலும் பசுமை நிறைந்த வகையில் பூஞ்சோலைகள், புல்வெளிகள், மலர் வகைகள், தடாகம், சிறுவர்களைக் கவரும் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஏராளமான ஓய்வெடுக்கும் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஐந்திணை பூங்காவிற்கு பின்பகுதியில் 50 ஏக்கருக்கும் அதிகமான பகுதிகளில் பத்திற்கும் மேற்பட்ட பண்ணை குட்டைகள் உள்ளன. பருவமழை மற்றும் கோடை மழை ஆகியவற்றின் மூலம் சேகரிக்கப்படும் மழை நீர் பண்ணை குட்டைகளில் ஆண்டு முழுவதும் தேக்கப்பட்டு பயன் தருகிறது. பண்ணை குட்டை நீரை மோட்டார் வைத்து புல்வெளிகள் மற்றும் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
கோடையிலும் வற்றாத அங்குள்ள தடாகமும் சுற்றுலாப் பயணிகளை கவர்கிறது. விற்பனைக்கான மலர் செடிகள் மரக்கன்றுகள் உள்ளன. மிளகாய் குழித்தட்டு நாற்றும் இங்கு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது.
தோட்டக்கலைத் துறை சார்பில் பராமரிக்கப்படும் இப்பூங்காவை பள்ளி விடுமுறை நாட்களில் ஏராளமானோர் ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர்.