/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
8 மணி நேரம் கடலில் தத்தளித்த தொண்டி மீனவர்புதுக்கோட்டை மாவட்ட போலீசார் விசாரணை
/
8 மணி நேரம் கடலில் தத்தளித்த தொண்டி மீனவர்புதுக்கோட்டை மாவட்ட போலீசார் விசாரணை
8 மணி நேரம் கடலில் தத்தளித்த தொண்டி மீனவர்புதுக்கோட்டை மாவட்ட போலீசார் விசாரணை
8 மணி நேரம் கடலில் தத்தளித்த தொண்டி மீனவர்புதுக்கோட்டை மாவட்ட போலீசார் விசாரணை
ADDED : அக் 04, 2025 03:30 AM
திருவாடானை: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம் கடலில் தவறி விழுந்து 8 மணி நேரமாக தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து புதுக்கோட்டை மாவட்ட மரைன் போலீசார் விசாரித்தனர்.
தொண்டியை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம், மீமிசல், ஜெகதாபட்டினம் போன்ற பல இடங்களில் தங்கியிருந்து மீன் பிடிக்கின்றனர். அக்., 1 இரவு கோட்டைபட்டினத்தில் இருந்து 136 விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அதில் முகமதுபாசுதினுக்கு சொந்தமான ஒரு படகில் தொண்டி அருகே காரங்காட்டை சேர்ந்த அருளானந்து 60, மற்றும் 6 பேர் கடலிலிருந்து 14 நாட்டிகல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அருளானந்து கடலில் தவறி விழுந்தார். அதிர்ச்சியடைந்த மற்ற மீனவர்கள் தேடிப் பார்த்தனர். அருளானந்தை கண்டுபிடிக்க முடியாததால் கரைக்கு திரும்பினர்.
இந்நிலையில் மறுநாள் தொண்டி அருகே நம்புதாளையை சேர்ந்த நாகூர்மீரான், ஜெகீஷ் மற்றும் சில மீனவர்கள் அந்தப்பக்கமாக மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது கடலில் அருளானந்து தத்தளித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தனர். உடனடியாக அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தகவல் கிடைத்த தொண்டி மரைன் நுண்ணறிவு பிரிவு ஏட்டு இளையராஜா மற்றும் போலீசார் அருளானந்தை ஆம்புலன்சில் ஏற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் மரைன் போலீசார் நேற்று அருளானந்திடம் விசாரித்தனர். அவரது புகாரில் போலீசார் வழக்கு பதிந்தனர். நம்புதாளை மீனவர்கள் கூறுகையில், எங்களின் படகை பார்த்த அருளானந்து சத்தம் போட்டார். அப்போது அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது தெரிந்து படகை அருகில் செலுத்தி மிதக்கும் பொருளை அவர் அருகில் வீசி காப்பாற்றினோம். படகிற்கு வந்தவுடன் அவர் மயக்கமடைந்தார். மீன்பிடிப்பதை நிறுத்திவிட்டு வேகமாக படகை செலுத்தி தொண்டி மருத்துவமனையில் சேர்த்தோம் என்றனர். நம்புதாளை மீனவர்களை மக்கள் பாராட்டினர். இச்சம்பவம் அப்பகுதி மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.