ADDED : அக் 21, 2025 03:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிக்கல்: சிக்கல் அருகே ஆதங்கொத்தங்குடி மேற்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி ஜெயராமன் 45. இவர் நேற்று காலை ஆதங்கொத்தங்குடி கண்மாயில் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராமல் கண்மாய்க்குள் மூச்சு திணறி உயிரிழந்தார். அக்கம் பக்கத்தினர் ஏர்வாடி தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவித்தனர்.
நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் கண்மாய்க்குள் இறங்கி தேடினர்.
ஜெயராமன் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். சிக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.