/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தி.மு.க., ஆட்சியில் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்
/
தி.மு.க., ஆட்சியில் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்
தி.மு.க., ஆட்சியில் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்
தி.மு.க., ஆட்சியில் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்
ADDED : அக் 08, 2025 02:56 AM
ராமேஸ்வரம்:''தி.மு.க., ஆட்சியில் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்,'' என, ராமேஸ்வரத்தில் சட்டசபை எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டினார்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்த உதயகுமார் அக்னி தீர்த்தம் மற்றும் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடினார். தாயார் நினைவாக கோயில் நுழைவில் மோட்ச தீபம் ஏற்றி சுவாமி, அம்மன் சன்னதியில் தரிசனம் செய்தார்.
பின் அவர் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் இதுநாள் வரை பேரிடர் மேலாண்மை கூட்டம் நடத்தப்படவில்லை. இதனால் தமிழகத்தில் கண்மாய்கள் துார்வாராமல் வாறுகால்களை சுத்தம் செய்யாமல் இருப்பது அரசின் அவல நிலையை காட்டுகிறது. இதன் மூலம் மழை சீசனில் உபரிநீர் விவசாய விளை நிலங்களில் புகுந்து விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே தி.மு.க., ஆட்சியில் விவசாயிகள் கண்ணீர் சிந்தும் நிலையில், இந்த பருவ மழை காலத்தில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை எடுக்காததால் மேலும் பாதிக்கப்படுவார்கள்.
தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் சர்வாதிகார ஆட்சி தான் தற்போது நடக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.