/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் அழுகியதால் விவசாயிகள் கவலை
/
மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் அழுகியதால் விவசாயிகள் கவலை
மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் அழுகியதால் விவசாயிகள் கவலை
மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் அழுகியதால் விவசாயிகள் கவலை
ADDED : ஜன 18, 2024 05:56 AM

ராமநாதபுரம்;: -ராமநாதபுரம் பாண்டியூர். நயினார்கோவில் பகுதியில் நெல் வயல்களில் மழை நீர் தேங்கியதில் பயிர்கள் அழுகி வீணாகியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சம் எக்டேருக்கு மேல் வடகிழக்கு பருவமழையை நம்பி நெல்சாகுபடிசெய்தனர். கடந்த வாரம் பெய்த கன மழை காரணமாக நெல் வயல்களில் தேங்கியிருந்த தண்ணீர் வடியாததால் நெற் பயிர்கள் அழுகி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பாண்டியூர், அரசடி வண்டல், நெடுஞ்குறிச்சி, வல்லம், பகைவென்றி, உடையார் குடியிருப்பு, பல்லவராயனேந்தல் உள்ளிட்ட கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் இருந்த நெற்பயிர்கள்மழை நீர் வடியாமல் அழுகியுள்ளன.
விவசாயிகள் தெரிவித்ததாவது: ஒரு ஏக்கருக்கு உழவு, உரம், விதைப்பு, என 15 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவிட்டு பலனில்லை. நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளை விரைவில் கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.