/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்க கெடுபிடி விவசாயிகள் புகார்
/
கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்க கெடுபிடி விவசாயிகள் புகார்
கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்க கெடுபிடி விவசாயிகள் புகார்
கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்க கெடுபிடி விவசாயிகள் புகார்
ADDED : அக் 19, 2024 04:48 AM
கடலாடி : தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களுக்கு கால்நடைகள் வாங்குவதற்கு அடமானம் இன்றி கடன் வழங்கப்பட்டது. தற்போது நகையை கொடுத்தால் தான் கடன் தரப்படும் என கெடுபிடி செய்வதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
கடலாடி பகுதி விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக கால்நடை வளர்க்கும் தொழில் விளங்குகிறது. சிறு, குறு விவசாயிகள் தங்களது வீடுகள் மற்றும் விளைநிலங்களில் சிறிய செட் அமைத்து ஆடு, மாடு உள்ளிட்டவைகளை வளர்த்து வாழ்வாதாரம் உயர்வதற்காக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கடனுக்காக விண்ணப்பிக்கும் பொழுது ஒத்துழைப்பு இல்லாததால் சிரமப்படுகின்றனர்.
ஆப்பூனுார் விவசாயி கருணாநிதி: கறவை மாடு வாங்கவும், மேய்ச்சலுக்காக ஆடுகளை வாங்கவும் ரூ.2 முதல் 3 லட்சம் வரை தொகை தேவைப்படுகிறது. அவற்றினை பெறுவதற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் கேட்டால், தாங்கள் வீட்டில் உள்ள நகையை கொண்டு வாருங்கள். அதற்கு ஏற்றவாறு கால்நடைகளுக்கான கடன் தொகை தருகிறோம் எனக் கூறுகின்றனர்.
எங்களிடம் நகை இருக்கும்பொழுது நாங்கள் ஏன் லோனுக்காக வங்கிக்கு அலைய வேண்டும். எனவே பழைய முறைப்படி கால்நடை வளர்க்க தகுதியுள்ள நபர்கள் குறிதது ஆய்வு செய்து அவர்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கு தொழிலை மேம்படுத்த தகுதியான உறுப்பினர்களை தேர்வு செய்து கடன் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகை ஈட்டின் பேரில் கால்நடைகளுக்கு கடன் வழங்கும் புதிய திட்டத்தால் எவ்வித பயனும் இல்லை என்றார்.

