/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொழில்நுட்ப மேலாண்மை குறித்து விவசாயிகள் கலந்தாய்வு நிகழ்ச்சி
/
தொழில்நுட்ப மேலாண்மை குறித்து விவசாயிகள் கலந்தாய்வு நிகழ்ச்சி
தொழில்நுட்ப மேலாண்மை குறித்து விவசாயிகள் கலந்தாய்வு நிகழ்ச்சி
தொழில்நுட்ப மேலாண்மை குறித்து விவசாயிகள் கலந்தாய்வு நிகழ்ச்சி
ADDED : அக் 28, 2025 03:43 AM

ராமநாதபுரம்: தமிழ்நாடு அரசு வேளாண் துறை சார்பில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மைகுறித்து மண்டபம் வட்டார விவசாயிகள் கலந்தாய்வு நிகழ்ச்சி ராமநாதபுரம் அருகே குயவன்குடி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடந்தது.
ராமநாதபுரம் வேளாண் இணை இயக்குநர்(பொ) பாஸ்கர மணியன் தலைமை வகித்தார். திருப்புல்லாணி வேளாண் உதவி இயக்குநர் செல்வம் துவக்கி வைத்தார்.அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன், பரமக்குடி உழவர் பயிற்சி நிலையம் வேளாண் துணை இயக்குநர் ராஜேந்திரன், அலுவலர்கள் சீதாலட்சுமி, மோனிஷா பங்கேற்றனர்.
விவசாயிகளிடையே மழை நீரில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு வயல்வெளியில் விசைத்தெளிப்பான் கொண்டு களைக்கொல்லி தெளிப்பு செய்யும் முறைகள் செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது.
பாரம்பரிய நெல் வகைகள், உயிர் உரங்கள், அங்கக இடுபொருட்கள், மஞ்சள் வண்ண ஒட்டும் பொறிகள், நுண்ணுாட்ட உரங்கள், மேலும் பல வேளாண்மை இடு பொருட்கள் தொடர்பான கண்காட்சி நடந்தது. உச்சிப்புளி வட்டார தொழில்நுட்ப மேலாளர் பானுமதி நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் பவித்ரன், சோனியா செய்தனர்.

