ADDED : டிச 26, 2025 05:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி மணிநகர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.
பரமக்குடி ஆர்.டி.ஓ., சரவண பெருமாள் தலைமை வகித்து கூட்டத்தை நடத்தினார். அப்போது விவசாயிகள், தங்கள் பகுதிகளில் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு உள்ளதால் கண்மாய்களுக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் உள்ளது.
காட்டுப்பன்றிகள், மான்கள் உள்ளிட்டவைகளால் பயிர்களுக்கு சேதம் உண்டாகிறது. இதற்கு தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரமக்குடி, பார்த்திபனுார் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உரத்தட்டுப்பாடு உள்ளத்துடன் அதிக விலைக்கு விற்கின்றனர்.
ஆகவே அதிகாரிகள் ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என்றனர். விவசாயிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

