/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
100 நாள் வேலை கிடைக்காமல் கிராமப்புற பெண்கள் அதிருப்தி
/
100 நாள் வேலை கிடைக்காமல் கிராமப்புற பெண்கள் அதிருப்தி
100 நாள் வேலை கிடைக்காமல் கிராமப்புற பெண்கள் அதிருப்தி
100 நாள் வேலை கிடைக்காமல் கிராமப்புற பெண்கள் அதிருப்தி
ADDED : டிச 26, 2025 05:24 AM

ஒன்றிய அலுவலகங்களில் முற்றுகை
பரமக்குடி: பரமக்குடி உள்ளிட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் 100 நாள் வேலை திட்டம் முறையாக ஒதுக்கப்படாததால் பெண்கள் தினம் தினம் ஒன்றிய அலுவலகங்களை முற்றுகையிடுகின்றனர்.
வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளிக்கும் வகையில் கிராம குடும்பங்களுக்கு ஒரு நிதியாண்டில் 100 நாள் வேலை திட்டம் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக பரமக்குடி, போகலுார், நயினார்கோவில் உட்பட பல்வேறு ஒன்றியங்களில் முறையாக வேலை வழங்கப்படாமல் உள்ளது.
பரமக்குடி அருகே எஸ்.அண்டக்குடி, சூடியூர் உள்ளிட்ட கிராமப் பகுதி மக்கள் ஒன்றிய அலுவலகங்களை முற்றுகையிட்டு பணி வழங்கக் கோரி வருகின்றனர்.
ஒரு சில கிராம செயலாளர்கள் திட்டப் பணி குறித்து எந்த முறையான தகவலும் வழங்காததால் கிராமப் பெண்கள் ஒன்றிய அலுவலகங்களுக்கு வருகின்றனர்.
தற்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் என்ற 100 நாள் வேலை திட்டம் விக்சித் பாரத் (ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு உறுதிச் திட்டம்)என பெயர் மாற்றப்பட்டு 125 நாட்கள் பணி வழங்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
ஆகவே வரும் நாட்களில் பாரபட்சமின்றி அனைத்து கிராமங்களிலும் வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

