/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மழையை எதிர்பார்த்து விதைப்பு பணியை துவக்கிய விவசாயிகள்
/
மழையை எதிர்பார்த்து விதைப்பு பணியை துவக்கிய விவசாயிகள்
மழையை எதிர்பார்த்து விதைப்பு பணியை துவக்கிய விவசாயிகள்
மழையை எதிர்பார்த்து விதைப்பு பணியை துவக்கிய விவசாயிகள்
ADDED : செப் 23, 2025 11:38 PM

முதுகுளத்துார்; முதுகுளத்துார் வட்டாரத்திற்க்கு உட்பட்ட கிராமங்களில் பருவமழையை எதிர்பார்த்து நெல் விதைப்பு பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வரு கின்றனர்.
முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட கீழத்துாவல், காக்கூர், சாம்பக்குளம், ஏனாதி, நல்லுார், கீரனுார், சித்திரக்குடி, கீழக்காஞ்சிரங்குளம், தேரிருவேலி, பூக்குளம், அப்பனேந்தல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரி பயிராக 20 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமாக நெல் விவசாயம் செய்து வருகின்றனர்.
நிலத்தை தரிசாக விடக்கூடாது என்பதற்காக கோடை உழவு செய்திருந்தனர்.
தற்போது பருவமழையை நம்பி இந்த ஆண்டு விவசாயிகள் நிலத்தை மீண்டும் உழவு செய்து நெல் விதைகள் விதைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் நெல் விதைப்பு பணியில் ஈடுபட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வரும் காலங்களில் இதே போன்று பருவமழை பெய்து கைகொடுத்தால் விவசாயம் செழித்து வளரும் என்று விவசாயிகள் கூறினர்.