/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் பெரிய கண்மாய் விவசாயிகள்... வேதனை: குறைந்தளவில் வைகை நீர் வரத்து
/
ராமநாதபுரம் பெரிய கண்மாய் விவசாயிகள்... வேதனை: குறைந்தளவில் வைகை நீர் வரத்து
ராமநாதபுரம் பெரிய கண்மாய் விவசாயிகள்... வேதனை: குறைந்தளவில் வைகை நீர் வரத்து
ராமநாதபுரம் பெரிய கண்மாய் விவசாயிகள்... வேதனை: குறைந்தளவில் வைகை நீர் வரத்து
ADDED : ஜூலை 15, 2025 03:28 AM

வைகை அணையிலிருந்து பாசனம் பெறக்கூடிய நிலங்கள் மூன்று பிரிவுகளாக உள்ளன. இதில் முதல் பிரிவில் பேரணை முதல் விரகனுார் வரையுள்ள 46 கண்மாய்கள் மூலம் 27 ஆயிரத்து 528 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது.
இரண்டாம் பிரிவில் விரகனுார் முதல் பார்த்திபனுார் மதகணை வரையிலான 87 கண்மாய்கள் மூலம் 40 ஆயிரத்து 742 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது. பார்த்திபனுார் மதகணையிலிருந்து ராமநாதபுரம் பெரிய கண்மாய்வரை 241 கண்மாய்கள் மூலம் 67 ஆயிரத்து 837 ஏக்கர் பாசனம் பெறுகிறது.
இதில் கடைமடைப் பகுதியான ராமநாதபுரம் கண்மாய்க்கு ஜூன் 19 முதல் 31 வரை 840 மில்லியன் கன அடி நீர் திறக்கப்பட்டது. 2ம் பகுதியான விரகனுார் முதல் பார்த்திபனுார் மதகணை வரையுள்ள பகுதிகளுக்கு ஜூலை 2 முதல் 6 வரை 345 மில்லியன் கன அடி நீர் திறக்கப்பட்டது. முதல் பகுதிக்கு ஜூலை 8 முதல் 11 வரை 190 மில்லியன் கன அடி நீர் திறக்கப்பட்டது.
இந்த தண்ணீரில் ராமநாதபுரம் கண்மாய் பகுதிக்கு 150 மில்லியன் கன அடி நீர் மட்டுமே வந்துள்ளது. கண்மாய் நீர் மட்டம் 2.5 அடியாக உள்ளது. 840 மில்லியன் கன அடி நீர் முழுமையாக கண்மாய்க்கு வந்து சேராததால் வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் பயன்பாடில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கால்நடைகளுக்காகவும், வைகை ஆற்றுப்படுகையில் உள்ள கூட்டு குடிநீர் திட்டங்கள் வேண்டுமானால் பயன்பெறும்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ராமநாதபுரம் பகுதியில் உள்ள சூரன்கோட்டை, முதுநாள், அச்சுந்தன் வயல், தொருவளூர் பகுதியில் இரண்டாம் போக விவசாயத்திற்கு இன்னும் 30 நாட்கள் தண்ணீர் தேவைப்படும்.
அதற்கு ராமநாதபுரம் கண்மாய் நீர் பயன்படும். முதல் போகத்திற்கு இந்த தண்ணீரை எந்த விதத்திலும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
அடுத்து பருவமழை பெய்தால் தான் ராமநாதபுரம் கண்மாய்க்கு நீர் வரத்தை எதிர்பார்க்க முடியும் என்றனர்.