/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோடையில் எள் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம்
/
கோடையில் எள் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம்
ADDED : பிப் 13, 2025 06:39 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் நெல் அறுவடை செய்த வயல்களில் விவசாயிகள் கோடை சாகுபடியாக எள் விதைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் மகசூல் நிலையை எட்டியதை தொடர்ந்து கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நெல் அறுவடை பணிகள் நடக்கிறது.
அறுவடை செய்த வயல்களில் தேங்கியிருந்த வைக்கோல்களை கால்நடைகளில் தீவனத்திற்காக விவசாயிகள் சேகரித்தனர்.
தற்போது வயல்களை உழவு செய்து எள் சாகுபடி செய்யும் விதமாக எள் விதைப்பை மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக செங்குடி, எட்டியத்திடல், வரவணி, பூலாங்குடி, ஏந்தல், வாணியக்குடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் எள் விதைப்பில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
எள் சாகுபடியை பொறுத்த வரை எள் விதைகள் முளைப்புக்கு ஏற்ற ஈரப்பதம் இருந்தால் போதுமானது. அதன் பின் அதிக மழைப்பொழிவு தேவையில்லை.
லேசான ஈரப்பதத்திலும், வறட்சியிலும் அதிக மகசூல் கொடுக்கும் பயிர் வகை என்பதால் கோடை சாகுபடியாக எள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டியுள்ளனர்.