/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிழங்குகளுக்காக பனை விதைகள் பதியமிடுவதில் விவசாயிகள் ஆர்வம்
/
கிழங்குகளுக்காக பனை விதைகள் பதியமிடுவதில் விவசாயிகள் ஆர்வம்
கிழங்குகளுக்காக பனை விதைகள் பதியமிடுவதில் விவசாயிகள் ஆர்வம்
கிழங்குகளுக்காக பனை விதைகள் பதியமிடுவதில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : அக் 12, 2025 05:39 AM

ஆர்.எஸ்.மங்கலம் : மாவட்டத்தில் பனங்கிழங்குகளுக்காக பனை விதைகளை மண்ணில் பதியமிடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் திருவாடானை, ஆர்.எஸ். மங்கலம், சாயல்குடி, கமுதி, முதுகுளத்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அதிகளவில் பனை மரங்கள் உள்ளன. பனை மரத்தின் அடி முதல் அதன் நுனி வரை பொதுமக்களுக்கு பயனளிக்கும் கற்பக விருச்சகமாக திகழ்ந்து வருகிறது. தற்போது பனங்காய் சீசன் என்பதால் பனை மரங்களில் இருந்து சேகரிக்கப்படும் பனை விதைகளை விவசாயிகள் மொத்தமாக சேகரித்து பனை கிழங்குகளுக்காக மணல் பாங்கான இடங்களில் பனை விதைகளை பதியமிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பதியமிடப்படும் பனை விதைகள் பொங்கல் பண்டிகையின் போது கிழங்குகளாக அறுவடை செய்யப்படும் என்பதால் தற்போது பனை விதைகள் பதியமிடுவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.