/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மிளகாய் விதைப்பில் விவசாயிகள் ஆர்வம்
/
மிளகாய் விதைப்பில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : அக் 11, 2025 03:54 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மிளகாய் விதைப்பில் விவசாயிகள் ஆர்வம் செலுத்துகின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த மாதம் நெல் விதைப்பு செய்யப்பட்ட நிலையில் பெரும்பாலான பகுதிகளில் போதிய மழையின்றி நெல் முளைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பாதிப் படைந்துள்ளனர்.
இந்நிலையில் லேசான ஈரப்பதத்தில் அதிக மகசூல் கொடுக்கக்கூடிய மிளகாய் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் செலுத்துகின்றனர். குறிப்பாக நெல் பயிர்கள் மகசூல் நிலையை அடையும் வரை அதிகளவில் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் மிளகாய் செடிகள் வெப்பத்திலும், லேசான ஈரப்பதத்திலும் மகசூல் கொடுக்கக்கூடிய தோட்டக்கலை பயிராகும். இதனால் தற்போதுள்ள சூழலில் மிளகாய் விதைப்பு செய்வதில் ஆர்.எஸ்.மங்கலம் வட்டார விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.