/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மிளகாய் விதைப்பில் விவசாயிகள் ஆர்வம்
/
மிளகாய் விதைப்பில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : அக் 31, 2025 12:17 AM
ஆர்.எஸ்.மங்கலம்:  ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மிளகாய் விதை விதைப்பு செய்வதில் விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான செங்குடி, வரவணி, எட்டியதிடல், முத்துப்பட்டினம், வல்லமடை, புல்லமடை, சவேரியார்பட்டினம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக மிளகாய் சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த தொடர் கனமழையால் பெரும்பாலான நெல் வயல்கள் தண்ணீரில் மூழ்கி நெற்பயிர்கள் பாதிப்படைந்தன.
இதனால் பெரும்பாலான விவசாயிகள் நெற்பயிர்கள் பாதிப்படைந்த விளை நிலங்களை உழவு செய்து மிளகாய் விதைப்பு செய்து வருகின்றனர். நெல் விவசாயத்தைப் போல் மிளகாய் சாகுபடிக்கு அதிக தண்ணீர் தேவை இல்லாததால் மிளகாய் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவதாக தெரிவித்தனர்.

