/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அலைபேசி இணைப்பு துண்டிப்பு: மக்கள் அவதி
/
அலைபேசி இணைப்பு துண்டிப்பு: மக்கள் அவதி
ADDED : அக் 31, 2025 12:17 AM
திருவாடானை:  திருவாடானை, தொண்டி உட்பட மாவட்டம் முழுவதும் அலைபேசியில் பேசும் போதே 'கட்' ஆவதை நிறுவனங்கள் சரி செய்யாததால் மக்கள் தவிக்கின்றனர்.
திருவாடானை, தொண்டி பகுதியில் சமீப காலமாக அலைபேசியில் யாரிடமும் முழுமையாக பேச முடியவில்லை. பேசிக்கொண்டிருக்கும் போதே சிக்னல் சரிவர கிடைக்காமல் இணைப்பு துண்டிக்கப்படுகிறது.
ஒருவர் பேசும் போது அடுத்த முனையில் இருப்பவருக்கு புரியாமல் போவதுமாக உள்ளது. பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ஜியோ, வோடாபோன் என அனைத்து நிறுவன இணைப்புகளுக்கும் இப்பிரச்னை உள்ளது.
மக்கள் கூறுகையில், எண்ணை பதிவு செய்தவுடன் அடுத்த முனையில் உள்ள அலைபேசிக்கு ரிங் போவது கேட்பது இல்லை.
மறு முனையில் பேசுபவர்களின் குரல் கேட்காததால் 'கட்' செய்து விட்டு மறுபடி தொடர்பு கொள்ள வேண்டியுள்ளது. பேசிக்கொண்டிருக்கும் போதே 'கட்' ஆகிறது.
இதனால் அவசர தகவல்களை தெரிந்து கொள்ள முடியாமல் அவதியாக உள்ளது. அனைத்து நிறுவன சேவைகளும் இதே போல் உள்ளது. பல மாதங்கள் ஆகியும் சரி செய்யவில்லை என்றனர்.

