/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிறு தானிய சாகுபடிக்கு விவசாயிகள் ஆயத்தம்
/
சிறு தானிய சாகுபடிக்கு விவசாயிகள் ஆயத்தம்
ADDED : பிப் 16, 2025 06:37 AM
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் தேங்கியுள்ள தண்ணீரை பயன்படுத்தி சிறு தானிய சாகுபடி செய்ய விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பாசனத்தின் கீழ் உள்ள பெரும்பாலான விவசாய நிலங்களில் நெல் அறுவடை முடிவடைந்துள்ளன.
இந்நிலையில் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் கோடை சாகுபடி மேற்கொள்ளும் அளவுக்கு பெரிய கண்மாயில் தண்ணீர் உள்ளது.
பெரிய கண்மாயில் தற்போது 3.5 அடி தண்ணீர் உள்ள நிலையில் தண்ணீரை பயன்படுத்தி உளுந்து, தட்டை பயறு உள்ளிட்ட சிறுதானிய பயிறு வகைகளையும், பருத்தி, எள் உள்ளிட்ட பயிர்களையும் சாகுபடி செய்ய விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தற்போது அறுவடை செய்யப்பட்ட வயல்களை உழவு செய்து சிறுதானியப் பயறு வகைகள் மற்றும் பருத்தி உள்ளிட்ட பயிர்களையும் கோடை சாகுபடியாக விதைப்பு செய்து கோடை சாகுபடியை விவசாயிகள் தீவிரப்படுத்தி உள்ளது.