/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கால்நடை ஆம்புலன்ஸ் சேவை இல்லாததால் விவசாயிகள் அவதி
/
கால்நடை ஆம்புலன்ஸ் சேவை இல்லாததால் விவசாயிகள் அவதி
கால்நடை ஆம்புலன்ஸ் சேவை இல்லாததால் விவசாயிகள் அவதி
கால்நடை ஆம்புலன்ஸ் சேவை இல்லாததால் விவசாயிகள் அவதி
ADDED : டிச 24, 2024 04:21 AM
சிக்கல்: சிக்கல் அருகே தனிச்சயம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசின் கால்நடைத்துறை சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை இல்லாத நிலை தொடர்கிறது.
டி.கிருஷ்ணாபுரம், மாரியூர், ஒப்பிலான், தனிச்சயம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருமானம் ஈட்டுகின்றனர். ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகள் கால வெப்ப நிலை மாறுபடும் போது நோயால் பாதிக்கப்படுகின்றன.
இதற்கான தடுப்பூசி மற்றும் பசுக்களுக்கான சினை பருவ ஊசி, ஆடு, கோழிகளுக்கான தடுப்பூசி உள்ளிட்டவை இல்லாமல் உள்ளன. டி.கிருஷ்ணாபுரம் அருகே உள்ள திருவரங்கை கால்நடை மருத்துவமனையில் டாக்டர் பற்றாக்குறை நிலவுகிறது.
சிக்கல் கால்நடை மருத்துவர் கூடுதல் பொறுப்பாக திருவரங்கை கால்நடை மருத்துவமனை பணிகளையும் சேர்த்து கவனிக்கிறார். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கிராமங்கள் தோறும் செல்லும் ஆம்புலன்ஸ் சேவையை இப்பகுதியில் வழங்குவதற்கு கால்நடைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெயரளவிற்கு ஆம்புலன்ஸ் சேவை இருப்பதைக் காட்டிலும் முறையான விவசாயிகளுக்கு பயனுள்ள சேவையாக மாற்ற வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது என்றனர்.