/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நெல் அறுவடை இயந்திரம் வாடகை உயர்வால் விவசாயிகளுக்கு இழப்பு
/
நெல் அறுவடை இயந்திரம் வாடகை உயர்வால் விவசாயிகளுக்கு இழப்பு
நெல் அறுவடை இயந்திரம் வாடகை உயர்வால் விவசாயிகளுக்கு இழப்பு
நெல் அறுவடை இயந்திரம் வாடகை உயர்வால் விவசாயிகளுக்கு இழப்பு
ADDED : ஜன 05, 2025 11:54 PM

திருவாடானை; திருவாடானை தாலுகாவில் நெல் அறுவடை துவங்கியது. அதற்குரிய இயந்திரத்தின் வாடகை உயர்வால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
திருவாடானை தாலுகாவில் இந்த ஆண்டு 26 ஆயிரத்து 680 எக்டேர் நிலங்களில் சாகுபடி பணிகள் துவங்கியது.
தற்போது பயிர் அறுவடைபணிகள் நடக்கிறது. ஆனால் அறுவடை இயந்திர வாடகை உயர்வால் விவசாயிகள் இழப்பை சந்தித்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கவாஸ்கர் கூறியதாவது- வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பெல்ட் இயந்தரம் மூலம் அறுவடை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஒரு மணி நேரத்திற்கு ரூ.3000 முதல் 3500 வரை வாடகை வசூல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும்.
திருவாடானை, ஆர்.எஸ். மங்கலம் தாலுகாவில் மழையால் பாதிக்கபட்ட பயிர்களை கணக்கெடுத்து நிவாரண தொகை வழங்க வேண்டும். தனியார் வியாபாரிகள் 62 கிலோ எடையுள்ள நெல் மூடை ரூ.1300க்கு வாங்குகின்றனர். மிகவும் குறைவான விலைக்கு கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களை கூடுதலாக திறக்க வேண்டும் என்றனர்.