/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் பதிவு மேற்கொள்வதில் காலதாமதம்; ஓ.டி.பி., நடைமுறையை மாற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

UPDATED : அக் 27, 2025 07:10 AM
ADDED : அக் 27, 2025 03:16 AM

விவசாயிகள் சாகுபடி செய்யும் நெல், மிளகாய், பருத்தி உள்ளிட்ட பல்வேறு விவசாய பயிர்கள் வெள்ளம் மற்றும் கடும் வறட்சி காரணமாக, சாகுபடி பயிர்கள் பாதிக்கப்படும்போது, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் வகையில், 2016 முதல் பிரதான் மந்திரி பயிர் இன்சூரன்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், நடப்பு ராபி பருவத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் நெல் பயிர்களுக்கு இன்சூரன்ஸ் பதிவு மேற்கொள்வதற்கு நவ.,15 வரையும், மிளகாய் சாகுபடிக்கு அடுத்த 2026 ஜன.,31 வரையும் காலக்கடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு வரை இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய, வீ.ஏ.ஓ., வழங்கும் சாகுபடிக்கான அடங்கல், வங்கி பாஸ் புத்தகம், பட்டா சிட்டா 10 (1) ஆகியவை கொடுத்து, பொது சேவை மையங்களில் விவசாயிகள் பதிவு மேற்கொண்டனர்.
ஆனால், தற்போது புதிதாக விவசாயிகளின் அலைபேசிக்கு வரும் ஓ.டி.பி., எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளுக்கான பதிவு மேற் கொள்வதற்கு கூடுதல் கால விரயம் ஏற்படுவதுடன், வயதான விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இன்சூரன்ஸ் பதிவு செய்வதற்கு குறைந்த நாட்களை உள்ள நிலையில், அலைபேசி ஓ.டி.பி., நடைமுறையை நீக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
இதுபோன்று கடந்தாண்டு முதல், பட்டா சிட்டா 10 (1) எடுப்பதற்கும் விவசாயிகளின் அலைபேசியில் ஓ.டி.பி., கட்டாயமாக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.