/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
/
பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : நவ 18, 2024 07:12 AM
சாயல்குடி : -தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட குழு கூட்டம் சாயல்குடியில் நடந்தது. இதில் நீண்டகால பயிர்கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தினர்.
மாவட்ட குழு கூட்டத்திற்கு தாலுகா நிர்வாகி முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கருணாநிதி முன்னிலை வகித்தார்.
இதில், முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதில் அறிவித்தபடி 2023-24 பயிர் கடனையும் நீண்ட கால கடன்களையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், பிரதமரின் தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.6000த்தை ரூ.12000 ஆக உயர்த்தி தர வலியுறுத்தியும், மண்டபம் ஒன்றியத்திற்குட்பட்ட தாமரைக் குளம் பகுதியில் உள்ள கால்வாய்களுக்கு பட்டா கொடுப்பதை நிறுத்தி, விவசாய நிலங்களுக்கும் கண்மாய்களுக்கும் தண்ணீர் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும்.
கடலாடி தாலுகாவில் 2023-24 ஆண்டிற்கு வெள்ளம் பாதித்த பயிர்களான நெல், மிளகாய் பயிர்களுக்கு உடனடியாக இன்சூரன்ஸ் தொகை வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மாவட்ட பொருளாளர் நாகராஜ், தாலுகா தலைவர் செல்வராஜ் பங்கேற்றனர்.