/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற மோட்டார் வைத்து தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்
/
தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற மோட்டார் வைத்து தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்
தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற மோட்டார் வைத்து தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்
தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற மோட்டார் வைத்து தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்
ADDED : நவ 23, 2025 04:45 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு புறம் தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி வருகிறது.
ஒருபுறம் விவசாயிகள் நெற்பயிரை காப்பாற்ற மோட்டார் வைத்து தண்ணீரை பாய்ச்சி வருகின்றனர்.இதனால் நெல் விவசாயத்தை காப்பாற்ற விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட செல்வநாயகபுரம், கீரனுார், காக்கூர், குமாரக்குறிச்சி, ஏனாதி, பூக்குளம், தேரிருவேலி, வெண்ணீர்வாய்க்கால், சித்திரங்குடி, கீழத்துாவல், மரவெட்டி, அப்பனேந்தல், மகிண்டி உட்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரி பயிராக நெல் விவசாயம் செய்கின்றனர்.
நடப்பு ஆண்டில் 30 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக நெல் விவ சாயம் செய்கின்றனர்.
முதுகுளத்துார் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு மாதத்திற்கு முன்பு மழை பெய்ததால் நெற்பயிர்கள் ஓரளவு வளரத் துவங்கியுள்ளது.நெற்பயிர்களுக்கு சமமாக களைகள் அதிகமாக வளர்ந்துள்ளது.
இதனால் களைக்கொல்லி மருந்து அடித்தல், உரமிடுதல் உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வரு கின்றனர்.
களைகள் எடுக்க கூலி வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.
முதுகுளத்துார் அருகே செல்வநாயகபுரம், கீரனுார், ஆனைசேரி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போதிய தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகி வருகிறது.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஒருபுறம் முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட சில கிராமங்களில் உள்ள விவசாயிகள் வரத்து கால்வாய், கண்மாய், ஊருணிகளில் தேங்கிய மழைநீரை மோட்டார் வைத்து இரவு பகலாக சுழற்சி முறையில் கூடுதல் பணம் செலவு செய்து நெற்பயிரை காப்பாற்றும் முயற்சியில் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
முதுகுளத்துார் வட்டாரத்தில் ஒருபுறம் தண்ணீர் இன்றி கருகி வரும் நெற்பயிர்களை ஒரு புறம் தண்ணீரை பாய்ச்சி காப்பாற்றி வருகின்றனர்.
இதே நிலை தொடர்ந்தால் நெல் விவசாயத்தில் நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

