/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அங்கன்வாடி மையத்தை சூழ்ந்த கழிவுநீர்: நோய் பரவும் அபாயம்
/
அங்கன்வாடி மையத்தை சூழ்ந்த கழிவுநீர்: நோய் பரவும் அபாயம்
அங்கன்வாடி மையத்தை சூழ்ந்த கழிவுநீர்: நோய் பரவும் அபாயம்
அங்கன்வாடி மையத்தை சூழ்ந்த கழிவுநீர்: நோய் பரவும் அபாயம்
ADDED : நவ 23, 2025 04:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் யானைக்கல் வீதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை கழிவுநீர் சூழ்ந்துள்ளதால் குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.
இங்கு 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். மழையால் அப்பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது. இங்கு வெளியேறும் கழிவுநீரால் அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் சாக்கடையாக காட்சியளிக்கிறது. இதனால் குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்குள் நடந்து செல்ல முடியாமல் திணறுகின்றனர்.
கட்டடத்தை சுற்றிலும் கழிவுநீர் தேங்கியுள்ளதால் குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. அங்கன்வாடி மையத்தை துாய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.