/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நெற்பயிருக்கு மோட்டார் வைத்து தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்
/
நெற்பயிருக்கு மோட்டார் வைத்து தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்
நெற்பயிருக்கு மோட்டார் வைத்து தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்
நெற்பயிருக்கு மோட்டார் வைத்து தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்
ADDED : நவ 16, 2025 03:44 AM

முதுகுளத்துார்: -: முதுகுளத்துாரில் நெற்பயிர்களுக்கு மோட்டார் வைத்து விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.
முதுகுளத்துார் தாலுகா தேரிருவேலி, காக்கூர், பூக்குளம், இளஞ்செம்பூர், நல்லுார், கீழத்துாவல், சாம்பக்குளம், அப்பனேந்தல் உள்ளிட்ட கிராமங்களில் ஒரு மாதத்திற்கு முன்பு நிலங்கள் உழவு செய்யப்பட்டு நெல் விதைப்பு செய்தனர்.
20 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் பயிர்கள் நன்கு முளைக்க தொடங்கியது. களை எடுத்தல், உரமிடுதல் உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டுகின்றனர்.
வயலில் தண்ணீர் குறைந்ததால் பயிர்கள் கருகும் நிலை உருவாகியுள்ளதால் முதுகுளத்துார்--- ராமநாதபுரம் ரோடு தேரிருவேலி போலீஸ் ஸ்டேஷன் அருகே தேங்கிய தண்ணீரை வயலுக்கு பாய்ச்சும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
கண்மாய், பண்ணைக்குட்டை, ஊருணி, வரத்து கால்வாய்களில் தேங்கியுள்ள தண்ணீரை மோட்டார் வைத்து விவசாயிகள் நெல் வயல்களுக்கு பாய்ச்சுகின்றனர்.