/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எஸ்.பி.ஐ., சார்பில் ஆர்.ஓ., வழங்கல்
/
எஸ்.பி.ஐ., சார்பில் ஆர்.ஓ., வழங்கல்
ADDED : நவ 16, 2025 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி சவுராஷ்டிரா மேல்நிலை பள்ளிக்கு எஸ்.பி.ஐ., வங்கியின் சி.எஸ்.ஆர்., நிதி திட்டத்தில் உப்பு நீரை குடிநீராக்கும் ஆர்.ஓ., இயந்திரம் வழங்கப்பட்டது.
சவுராஷ்டிரா கல்விக் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். தாளாளர் ரெங்கன் முன்னிலை வகித்தார்.
தலைமை ஆசிரியர் நாகராஜன் வரவேற்றார்.எஸ்.பி.ஐ., காரைக்குடி மண்டல மேலாளர் ஸ்டான்லி ஜோன்ஸ் ஆர்.ஓ., சிஸ்டத்தை துவக்கி வைத்தார்.
எஸ்.பி.ஐ., முதன்மை மேலாளர்கள் செல்வகுமார், அட்லிண்ட் வாழ்த்தினர். கல்விக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் துளசிராமன் நன்றி கூறினார். கணேஷ் ஆனந்த் ஒருங்கிணைத்தார்.

