/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீனவர் வலையில் சிக்கிய சூரிய மீன்
/
மீனவர் வலையில் சிக்கிய சூரிய மீன்
ADDED : நவ 16, 2025 01:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் மீனவர் வலையில் வால் இல்லாத அரிய வகை சூரிய மீன் சிக்கியது.
பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மன்னார் வளைகுடா ஆழ்கடலில் மீன்பிடித்து விட்டு நேற்று முன்தினம் கரை திரும்பினர். இதில் ஒரு மீனவரின் படகில் 12 கிலோ எடை கொண்ட ராட்சத சூரிய மீன் சிக்கியது. இந்த மீன் வால் இன்றி துடுப்பு போல் இருந்தாலும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ., வேகத்தில் நீந்தும் தன்மை கொண்டது.
ஆழ்கடலில் மட்டும் வசிக்கும் இம்மீன் 2 அடி நீளம் 2 அடி உயரத்தில் இருந்தது. ருசி இல்லாத இம்மீனை பாம்பன் வியாபாரிகள் கருவாட்டுக்கு வாங்கி உப்பில் பதப்படுத்தினர்.

