/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இன்சூரன்ஸ் சீர்திருத்த மசோதா கொண்டு வந்தால் போராட்டம் சங்க தென் மண்டல செயலாளர் அறிவிப்பு

ADDED : நவ 16, 2025 01:56 AM
ராமநாதபுரம்: ''இன்சூரன்ஸ் சீர்திருத்த மசோதாவை கொண்டு வந்தால் நாடு முழுவதும் வேலை நிறுத்தபோராட்டம் நடத்துவோம் ''என்று காப்பீட்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் தென் மண்டல செயலாளர் சுரேஷ் தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:
மத்திய அரசு இன்சூரன்ஸ் துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் வகையில் இன்சூரன்ஸ் சீர்திருத்த மசோதாவை வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில் நிறைவேற்றவுள்ளது. இது மக்களின் சேமிப்பு, நாட்டு நலனில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. தற்போது இன்சூரன்ஸ் துறையில் 43 சதவீதம் வரை அந்நிய நேரடி முதலீடு இருந்து வருகிறது.
அதுவே 100 சதவீதம் நேரடி முதலீடு வந்தால் பொதுத்துறை நிறுவனங்களை பாதிப்பிற்குள்ளாக்கும். இது மக்கள் விரோத நடவடிக்கை. இதனை மத்திய அரசு கைவிட வேண்டும். இதற்கு பதில் எல்.ஐ.சி., போன்ற பொதுத்துறை நிறுவனங்களை பலப்படுத்தும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
இன்சூரன்ஸ் சீர்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டால் நாடு முழுவதும் எல்.ஐ.சி., உள்ளிட்ட காப்பீட்டு நிறுவன பணியாளர்கள் வெளிநடப்பு, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். பொது மக்களையும் இணைத்துக் கொண்டு போராடுவோம் என்றார்.