/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கேதார கவுரீஸ்வரி அம்பிகை கோயிலில் நோன்பு விழா
/
கேதார கவுரீஸ்வரி அம்பிகை கோயிலில் நோன்பு விழா
ADDED : அக் 22, 2025 12:53 AM

பரமக்குடி: பரமக்குடி கேதார கவுரீஸ்வரி அம்பிகை கோயில் ஐப்பசி மாதம் கவுரி நோன்பு விழா நடக்கிறது.
கோயிலில் தீபாவளி பண்டிகையையொட்டி அக்., 20 காலை வாஸ்து சாந்தி, கும்ப ஸ்தாபனத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு கவுரி அம்மன் சிவ பூஜை அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. நேற்று மாலை அம்மன் கோலாட்டம் ஆடும் திருக்கோலத்தில் இருந்தார். இன்று மாலை 6:00 மணிக்கு ரிஷப வாகனத்தில் அமர்ந்து வீதி உலா வருகிறார்.
தொடர்ந்து ஊஞ்சல் சேவையும், அக்.,24 காலை உற்சவ சாந்தி விழாவையொட்டி பாலபிஷேகம் நடக்கிறது. அன்று இரவு பட்டு பல்லக்கில் சயன திருக்கோலத்தில் அம்பாள் வீதிகள் வருவார். ஏற்பாடுகளை தெலுங்கு விஸ்வ பிராமண மகாசபையினர் செய்திருந்தனர்.