/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பண்ணைக்குட்டைகளை நிரப்பி வரும் விவசாயிகள்
/
பண்ணைக்குட்டைகளை நிரப்பி வரும் விவசாயிகள்
ADDED : அக் 22, 2025 12:52 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வீணாகும் மழை நீரை விவசாயிகள் பண்ணைக்குட்டைகளில் சேகரித்து வருகின்றனர்.
தேரிருவேலி, காக்கூர், பூக்குளம், இளஞ்செம்பூர், நல்லுார், கீழத்துாவல் உட்பட பல்வேறு கிராமங்களில் ஒரு மாதத்திற்கு முன்பு நிலங்கள் உழவு செய்யப்பட்டு நெல் விதைகள் விதைத்துள்ளனர். தற்போது பயிர்கள் முளைக்கத் துவங்கியுள்ளன. முதுகுளத்துார் பகுதியில் மூன்று நாட்களாக மழை பெய்து வருவதால் பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஒருசில இடங்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல் பயிர்கள் அழுகி வருகிறது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகள் பண்ணைக்குட்டை அமைத்துள்ளனர். தற்போது பெய்து வரும் மழை நீரை பண்ணைக்குட்டையில் சேகரிக்கின்றனர். பருவ மழைக்காலம் துவங்குவதற்கு முன்பு ஒரு சில விவசாயிகள் பண்ணைக்குட்டையில் உள்ள சீமைகருவேல் மரங்கள் அகற்றி தண்ணீர் தேக்கி வைப்பதற்காக சீரமைத்துள்ளனர்.