/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேக்கம்
/
குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேக்கம்
ADDED : அக் 22, 2025 12:52 AM
ஆர்.எஸ்.மங்கலம்: மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி 4 வது வார்டு, பெரியார் தெரு, புல்லமடை ரோடு கிழக்கு தெரு, மேற்கு தெரு உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தேங்கிய மழைநீர் செல்வதற்கு முறையான கால்வாய்கள் இல்லாததால் மழைநீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். மேலும், அப்பகுதி தெருக்களுக்கு முறையான ரோடு வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.