/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டாக்டர்கள் நியமிக்க கோரி உண்ணாவிரதம்
/
டாக்டர்கள் நியமிக்க கோரி உண்ணாவிரதம்
ADDED : ஜன 22, 2025 06:10 AM
கமுதி : கமுதி அரசு மருத்துவமனையில் டாக்டர் பற்றாக்குறை உள்ளதால் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் கமுதி பஸ்ஸ்டாணட் அருகே உண்ணாவிரதம் நடந்தது.
தாலுகா செயலாளர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு காசிநாத துரை, மாவட்ட செயலாளர் குருவேல், மாவட்டக் குழு உறுப்பினர் முத்துவிஜயன் முன்னிலை வகித்தனர்.
கமுதி அரசு மருத்துவமனையில் புதிதாக டாக்டர்கள் நியமிக்க வேண்டும். அடிப்படை வசதிகளான கழிப்பறை, குடிநீர் வசதி செய்ய வேண்டும்.
கமுதி குண்டாறை துார்வார வேண்டும். மலட்டாறில் கமுதி பேரூராட்சி சார்பில் குப்பை கொட்டப்படுவதை நிறுத்த வேண்டும். கமுதி செட்டி ஊருணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.
கமுதி தெற்கு பகுதியில் துணை பஸ் நிலையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அப்போது தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். கமுதி ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.