/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தந்தை, மகன் விளையாட்டு குண்டு பாய்ந்து டிரைவர் காயம்
/
தந்தை, மகன் விளையாட்டு குண்டு பாய்ந்து டிரைவர் காயம்
தந்தை, மகன் விளையாட்டு குண்டு பாய்ந்து டிரைவர் காயம்
தந்தை, மகன் விளையாட்டு குண்டு பாய்ந்து டிரைவர் காயம்
ADDED : நவ 23, 2025 02:08 AM
திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியை சேர்ந்தவர் சேவியர், 40; மண் அள்ளும் இயந்திர டிரைவர். இவர், நேற்று முன்தினம் மதியம், தொண்டி -நம்புதாளையில் ரோட்டோர டீக்கடையில் டீ குடித்து விட்டு, அங்கிருந்த பெட்டிக்கடை முன், பெஞ்சில் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென பாய்ந்து வந்த துப்பாக்கி தோட்டா அவரது வலது பக்க தோளில் பாய்ந்தது.
மயக்கமடைந்தவர் நம்புதாளையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தோளில் பாய்ந்த தோட்டாவை டாக்டர்கள் அகற்றினர். தொண்டி போலீசார் விசாரித்தனர். அப்போது, சேவியர் அமர்ந்திருந்த கடையின் எதிரில் உள்ள டூ - வீலர் பழுது பார்க்கும் கடையை ஆய்வு செய்தனர். அங்கு துப்பாக்கி இருந்தது. அதை கைப்பற்றிய போலீசார், நம்புதாளையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 45, அவரது மகன் காளீஸ்வரன், 22, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'டூ - வீலர் பழுது பார்க்கும் கடை உரிமையாளருக்கு சொந்தமான ஏர் கன் துப்பாக்கியில், தோட்டாவை போட்டு அங்கு இருந்த இருவரும் சுடுவது போல விளையாடியுள்ளனர். அப்போது, சேவியர் உடலில் தோட்டா பாய்ந்துள்ளது' என்றனர்.

