/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மின்சாரம் தாக்கி மகன் பலி: சோகத்தில் தந்தை தற்கொலை
/
மின்சாரம் தாக்கி மகன் பலி: சோகத்தில் தந்தை தற்கொலை
மின்சாரம் தாக்கி மகன் பலி: சோகத்தில் தந்தை தற்கொலை
மின்சாரம் தாக்கி மகன் பலி: சோகத்தில் தந்தை தற்கொலை
ADDED : டிச 13, 2025 01:28 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் மின்சாரம் தாக்கி மகன் உயிரிழந்த சோகத்தில் தந்தை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மண்டபம் மீனவர் காலனியை சேர்ந்தவர் சேகர் 58. இவரது மகன் களஞ்சியம் 28. கடையில் வேலை செய்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் பழுதான மின் மோட்டாரை சரி செய்த போது எதிர்பாராமல் மின்சாரம் தாக்கி களஞ்சியம் துாக்கி வீசப்பட்டார்.
உறவினர்கள் அவரை மண்டபம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். அவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.
குடும்பத்தினர் கதறி அழுது சோகத்தில் இருந்தனர்.
துக்கம் தாளாமல் வேதனையில் இருந்த களஞ்சியம் தந்தை சேகர் வீட்டில் யாரும் இல்லாத போது அன்று இரவு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மண்டபம் இன்ஸ்பெக்டர் சரிதா பாலு, எஸ்.ஐ., முத்துமுனியசாமி விசாரிக்கிறார்.

