/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கையில் ரூ.3 லட்சம் கஞ்சா பறிமுதல்: கைது 2
/
இலங்கையில் ரூ.3 லட்சம் கஞ்சா பறிமுதல்: கைது 2
ADDED : டிச 13, 2025 01:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: இலங்கை மன்னார் பள்ளியமுனை கடலோரத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்ற படகை அந்நாட்டு கடற்படை வீரர்கள் சோதனையிட்டனர். அதில் 3 பார்சல்களில் 6 கிலோ கஞ்சா இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த வீரர்கள், இலங்கை கடத்தல்காரர்கள் இருவரை கைது செய்தனர். இந்த கஞ்சா தரம் உயர்ந்ததாகவும், இதனை வெளிநாட்டில் இருந்து கடத்தியதும் தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ. 3 லட்சம்.
கஞ்சாவை ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்ட கடலோரத்தில் இருந்து கள்ளத்தனமாக கடத்தி சென்று இலங்கை கடத்தல்காரர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இதனை கடத்திய கடத்தல் புள்ளிகள் குறித்து தமிழக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

