/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
யூரியா நிறுவனங்கள் மீது உரம் விற்பனையாளர்கள் புகார்
/
யூரியா நிறுவனங்கள் மீது உரம் விற்பனையாளர்கள் புகார்
யூரியா நிறுவனங்கள் மீது உரம் விற்பனையாளர்கள் புகார்
யூரியா நிறுவனங்கள் மீது உரம் விற்பனையாளர்கள் புகார்
ADDED : டிச 12, 2025 05:26 AM
திருவாடானை: பயிர் ஊக்கி போன்ற பல உரங்களை இணைத்து வாங்க யூரியா நிறுவனம் கட்டாயப்படுத்துவதாக உர விற்பனையாளர்கள் குற்றம் சாட்டினர்.
திருவாடானை, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், மங்களக்குடி, சின்னக்கீரமங்கலம், எஸ்.பி.பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட உரம் விற்பனையாளர்கள் உள்ளனர்.
யூரியா உரங்கள் வாங்கும் போது பயிர் ஊக்கிகளை இணைத்து வாங்குங்கள் என்று யூரியா நிறுவனம் கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. சில உரம் விற்பனையாளர்கள் கூறியதாவது:
யூரியா நிறுவனங்களிடம் உரம் வாங்கும் போது யூரியாவுடன் பொட்டாஷ் மற்றும் சிக்கலான உரங்களை வாங்கினால் மட்டுமே யூரியாவை தருவதாக விற்பனையாளர்களுக்கு நிபந்தனை விதிக்கிறார்கள்.
தரமற்ற மாற்று பொருட்களை வாங்கும்படி கட்டாயப்படுத்தும் போது வேறு வழியில்லாமல் வாங்க வேண்டியுள்ளது. அந்த வகையான உரங்களை விவசாயிகளிடம் கொடுக்க முடியாததால் உரம் விற்பனையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இது சம்பந்தமாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

