ADDED : டிச 12, 2025 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் உலக மண் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி தலைவர் அகமதுயாசின் தலைமை வகித்தார். முதல்வர் ராமர் முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் ரஞ்சிதம் வரவேற்றார்.
'மண் ஆரோக்கியமே நாட்டின் உணவு பாதுகாப்பின் உறுதி' என்ற தலைப்பில் மாணவர்களிடம் இயற்கை விவசாயி ராமர் பேசுகையில், மண்ணில் ஊட்டச்சத்து இழப்பு, ரசாயன பயன்பாட்டின் தாக்கம், கரிம பொருட்கள் அதிகரிப்பு, இயற்கை வேளாண்மையின் நன்மைகள் குறித்து தகவல்கள் பரிமாறப்பட்டு வழிமுறைகளையும் எடுத்துரைத்தார்.
கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்கள், பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் பரத் ஏற்பாடுகளை செய்தார்.

