/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தாழ்வாக தொங்கும்மின் கம்பியால் அச்சம்
/
தாழ்வாக தொங்கும்மின் கம்பியால் அச்சம்
ADDED : ஏப் 15, 2025 05:37 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே பெருங்கருணையில் சேதமடைந்துள்ள மின்கம்பம் மற்றும் தாழ்வாக செல்லும் உயர்அழுத்த மின்கம்பியால் மக்கள் அச்சப்படுகின்றனர்.
பெருங்கருணையில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.இங்கு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. முதுகுளத்துார் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படுகிறது. கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட மின்கம்பம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. ஆயிரம் வள்ளிஅம்மன் கோயில் அருகே உயர்அழுத்த மின்கம்பி தாழ்வாக செல்வதால் சிறுவர்கள் எட்டி தொடும் துாரத்தில் செல்கிறது.
இதனால் கோயிலுக்கு வரும் மக்கள் அச்சப்படுகின்றனர். கிராமத்திற்கு மின்கம்பம் மாற்ற வேண்டும் என்று பலமுறை அளித்த புகாரின் பேரில் ஒரு சில இடங்களில் புதிதாக மின்கம்பம் இறக்கி வைக்கப்பட்டும் மாற்றப்படவில்லை. எனவே மின்வாரியத்தின் அலட்சியத்தால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.எனவே பெருங்கருணையில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பியை உயர்த்தி கட்டுவதற்கும், மின்கம்பத்தை மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர்.