/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம்
/
பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம்
ADDED : நவ 16, 2025 10:56 PM
திருவாடானை: பொது இடங்களில் குப்பை கொட்டினால் ஊராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் 47 ஊராட்சிகள் உள்ளன. பல லட்சம் மக்கள் வசிக்கும் இப்பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
கிராமங்களில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதால் சுகாதாரக் கேடுகள் ஏற்படுகிறது. இதுகுறித்து திருவாடானை பி.டி.ஓ. (ஊராட்சி) ஆரோக்கிய மேரிசாராள் கூறியதாவது:
பொது இடங்களில் குப்பை கொட்டுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து அடிக்கடி விழிப்புணர்வு ஏற்படுத்தியும் சிலர் கண்டு கொள்வதில்லை.
குப்பை நம் வீட்டில் இருந்து வெளியில் சென்றால் போதும். அதற்கு பிறகு என்ன ஆனால் நமக்கு என்ன என்ற மனநிலையில் தான் பெரும்பாலான மக்கள் உள்ளனர்.
உள்ளாட்சி நிர்வாகங்களின் துாய்மைப் பணியாளர்கள் வீடு தேடி வந்து குப்பை சேகரித்து சென்றாலும் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
குளம், குட்டை, ஆற்றங்கரை உள்ளிட்ட இடங்களில் குப்பை கொட்டி சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்துகின்றனர்.
இனிவரும் காலங்களில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அபராதம் விதிக்கப்படும் என்றார்.

