/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானை மத்திய கூட்டுறவு வங்கிக்கு விருது
/
திருவாடானை மத்திய கூட்டுறவு வங்கிக்கு விருது
ADDED : நவ 16, 2025 10:56 PM
திருவாடானை: திருவாடானை மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக மேலாண்மைக்காக சிறந்த வங்கியாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. ராமநாதபுரத்தில் நேற்று 72 வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நடந்தது.
இதில் மாவட்டத்தில் உள்ள 32 மத்திய கூட்டுறவு வங்கிகளில் திருவாடானை மத்திய கூட்டுறவு வங்கி சிறந்த வங்கியாக தேர்வு செய்யப்பட்டு வங்கி மேலாளர் சந்திரசேகருக்கு விருது வழங்கப்பட்டது. இது குறித்து சந்திரசேகர் கூறியதாவது:
மாவட்டத்தில் 32 மத்திய கூட்டுறவு வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகளில் மகளிர் குழுக்களுக்கு அதிக நிதி வழங்கியது, தனிநபர் கடன், நிர்வாக மேலாண்மை, மாற்று திறனாளிகளுக்கு கடன் வழங்கல், குறிப்பிட்ட காலத்திற்குள் கடன் வசூல் செய்தல், நகைக்கடன் வழங்கல், பொது மக்களுக்கு செய்து வரும் சேவைகள், அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைதல் போன்ற பல திட்டங்களை செயல்படுத்தியதற்காக சிறந்த வங்கியாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கபட்டது.
கடந்த ஆண்டும் இதே போல் சிறந்த வங்கியாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கபட்டது என்றார். தொடர்ந்து இரு ஆண்டுகளாக விருது வாங்கியதால் பொதுமக்கள் பாராட்டினர்.

